முக்கிய செய்தி
பாதீட்டுக்கு வாக்களிக்க பாராளுமன்றம் பிரவேசிக்கலாம் !
இராஜாங்க அமைச்சர் டயனா கமகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய் பெரேரா ஆகியோர், பாதீட்டுக்கு வாக்களிப்பதற்காக பாராளுமன்றத்துக்கு பிரவேசிக்க முடியும் என பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குறித்த மூவருக்கும், பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு ஒரு மாதகால தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற வளாகத்தில் அண்மையில் ஏற்பட்ட மோதல் தொடர்பான நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் குழுவின் பரிந்துரைகள் மீதான வாக்கெடுப்பின் பின்னர் இன்று காலை இந்த தடை விதிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், எதிர்வரும் 13ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள பாதீட்டின் 3 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் பங்கேற்பதற்காக அவர்கள் மூவரும் பாராளுமன்றத்துக்கு பிரவேசிக்க முடியும் என பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.