முக்கிய செய்தி
யூரியா உரத்திற்காக வவுச்சர் பெற்ற விவசாயிகளுக்கான முக்கிய அறிவித்தல்
சிறுபோகத்தில் யூரியா உரத்திற்காக வழங்கப்பட்ட வவுச்சர்களுக்கு உரத்தை பெற்றுக் கொள்ளாத விவசாயிகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் உரத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு விவசாய அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்காக அரசாங்கம் விவசாயிகளுக்கு வவுச்சர்கள் வழங்கியுள்ளதாகவும் அந்த வவுச்சரை கொண்டு உரத்தை பெற்றுக் கொள்ளாதவர்கள் இருப்பதாகவும் கமநல அபிவிருத்தி திணைக்களம் விவசாய அமைச்சுக்கு அறியப்படுத்தியுள்ளது.
இதற்கமைய, சிறுபோகத்தில் பயன்படுத்தப்படாத வவுச்சர்களை பெருபோகத்தின் போது பயன்படுத்துவதற்கு அனுமதிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.