முக்கிய செய்தி
தற்காலிகமாக மூடப்படும் புதிய களனி பாலம்
புதிய களனி பாலத்தை 03 கட்டங்களாக தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்தியவசியமான நவீனமயமாக்கல் பணியினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.
இதன்படி, புதிய களனி பாலம் டிசம்பர் 1ஆம் திகதி முதல் 4ஆம் திகதி வரையிலும், டிசம்பர் 8ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரையிலும், டிசம்பர் 15ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையிலும் தற்காலிகமாக மூடப்படும் என வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.