முக்கிய செய்தி
சபையில் சுமந்திரனுக்கு பதிலளித்த ஜனாதிபதி: அரசியலமைப்பு சபை தொடர்பில்
அரசியலமைப்பு சபை நாடாளுமன்றத்தின் ஒரு அங்கமா அல்லது இல்லையா என நாடாளுமன்ற குழுவொன்றினை அமைத்து ஆராய்வோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் ‘அரசியலமைப்பு சபை நாடாளுமன்றத்தின் ஒரு அங்கமா அல்லது இல்லையா’ என்ற கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
ஜனாதிபதியின் பதில்
“அரசியலமைப்பு பேரவையானது நாடாளுமன்றத்தின் நிறைவேற்று அதிகாரத்தின் ஒரு அங்கம் என்ற தனது கருத்தை சுமந்திரன் நிராகரித்துள்ளார்.
தனது கருத்தை மிகச்சரியாக புரிந்து கொள்வதற்காக 17வது அரசியலமைப்பு திருத்த வழக்கின் தீர்ப்பைக் கூற விரும்புகின்றேன்.
அரசியலமைப்பு பேரவையானது ஆரம்பம் முதல் நிறைவேற்று அதிகாரத்தின் ஒரு அங்கமாகவே கருதப்பட்டு வருவதுடன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் தீர்மானங்களை ஆதரிப்பதே அதன் செயற்பாடாகும்” என கூறியுள்ளார்.