Connect with us

முக்கிய செய்தி

மூன்று வகையான சிகரெட்களுக்கு தடை விதிப்பு…!

Published

on

  

 

இலங்கை புகையிலை நிறுவனத்தினால் (CTC) விநியோகிக்கப்பட்ட மூன்று வகையான சிகரெட் விற்பனை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி Dunhill Switch, Dunhill Double Capsule மற்றும் John Player Gold Pro Cool ஆகிய சிகரெட் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

நவம்பர் 17 முதல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையால் (NATA) மாத்தறை, கொழும்பு மற்றும் அனுராதபுரத்தில் 1982 (33) வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் 2016 ஆம் ஆண்டு செப்டெம்பர் 1 ஆம் திகதி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கிடையில், இந்த சிகரெட்டுகளின் விற்பனையை உடனடியாக நிறுத்துமாறும், கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு இந்த சிகரெட் பாக்கெட்டுகளை காட்சிப்படுத்தினால் அவற்றை அகற்றுமாறும் CTC தனது சில்லறை விற்பனையாளர்களுக்கு அறிவித்துள்ளது.

NATA சட்டத்தின்படி, முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் 2006 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபை சட்டத்தின் பிரிவு 33 உடன் வாசிக்கப்பட்ட பிரிவு 30 இன் கீழ் விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வர்த்தமானியின் படி, புகையற்ற புகையிலை பொருட்கள் அல்லது கலவைகள் புகையிலை, புகையிலையை உள்ளடக்கிய சுவையூட்டப்பட்ட, நிறமுடைய அல்லது இனிப்புச் சிகரெட் அல்லது புகையிலையைக் கொண்டிருக்கும் எலக்ட்ரானிக் சிகரெட் தடைசெய்யப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *