Connect with us

முக்கிய செய்தி

சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலையும் நீக்கம்.!

Published

on

உள்ளுர் சந்தையில் சீனிக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் அதிகபட்ச சில்லறை விலையை நீக்கி,

நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

அந்தவகையில், நவம்பர் மாதம் 03 ஆம் திகதி வெளியிடப்பட்ட முந்தைய வர்த்தமானி அறிவித்தல், இதன் மூலம் உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளது.

பொதி செய்யப்படாத 1 கிலோ வெள்ளை சீனி 275 ரூபாயும், பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ சீனிக்கு 295 ரூபாயும் நிர்ணயம் செய்து கடந்த 3 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.

மேலும், பொதி செய்யப்படாத 1 கிலோ சீனிக்கு 330 ரூபாயும்,

பொதி செய்யப்பட்ட சிவப்பு சீனிக்கு 350 ரூபாயும் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.