முக்கிய செய்தி
36 பிரதேசங்கள் டெங்கு அபாய வலயங்களாக அறிவிப்பு
2023 ஆம் ஆண்டில் இதுவரை நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 69,000 தாண்டியுள்ளது.நேற்றைய நிலவரப்படி டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தலா 14,000 க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது.இதன்படி, 2023 ஆம் ஆண்டில் மேல் மாகாணத்தில் 33,000 க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.ஜூன் மாதத்தில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.ஜூன் மாதத்தில் மொத்தம் 9,916 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மே மாதத்தில் 9,696 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.ஒக்டோபர் மாதத்தில் 4,010 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் . தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு 36 பிரதேசங்களை டெங்கு அபாய வலயங்களாக அறிவித்துள்ளது.நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையுடன் கடந்த சில நாட்களாக இனங்காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.