முக்கிய செய்தி
தரமற்ற மருந்து இறக்குமதி…!நிறுவன உரிமையாளர் விளக்கமறியலில்..!
தரமற்ற இம்யூனோகுளோபுலின் (Immunoglobulin) தடுப்பூசி குப்பிகளை இறக்குமதி செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளர் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, போலியான ஆவணங்களை சமர்ப்பித்து இந்தியாவில் இருந்து இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி குப்பிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில்,
குறித்த நிறுவனத்தின் உரிமையாளர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டார்.