முக்கிய செய்தி
O/L முடிவுகள் நவம்பர் இறுதியில் வெளியிடப்படும்
க.பொ. த சாதாரண தர பரீட்சையின் (2022/23) முடிவுகள் நவம்பர் மாத இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.இந்த நாட்களில் பெறுபேறுகளை கணனி மயமாக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.சுமார் ஒரு கோடியே நாற்பது இலட்சம் தரவுகள் கணினி மயமாக்கப்படும் என்று பரீட்சை திணைக்களம் கூறுகிறது.க.பொ. த சாதாரண தர பரீட்சைகள் மே 29 முதல் ஜூன் 8 வரை நடைபெற்றது.