முக்கிய செய்தி
புதிய சுகாதார அமைச்சராக ரமேஷ் பத்திரன நியமனம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் புதிய சுகாதார அமைச்சராக ரமேஷ் பத்திரன நியமிக்கப்பட்டுள்ளார்.ரமேஷ் பத்திரன இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.நாட்டிலிருந்து பெருமளவான வைத்தியர்கள் வெளியேறுவதுடன் சுகாதாரத் துறையும் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வரும் இக்கட்டான தருணத்தில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடமிருந்து அமைச்சு பதவியை அவர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.ரமேஷ் பத்திரன இதற்கு முன்னர் பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் கைத்தொழில் அமைச்சராக இருந்தார்.சிறிய அமைச்சரவை மாற்றம் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் நசீர் அஹமட்பாராளுமன்றத்தில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, சுகாதார அமைச்சின் சிக்கல்கள் காரணமாக அமைச்சரவை மறுசீரமைப்பு அவசியமானது.