முக்கிய செய்தி
நில்வளா கங்கையின் தாழ்வான பகுதிகளுக்கு பாரிய வெள்ள அபாய எச்சரிக்கை
நில்வளா கங்கையை ஒட்டிய தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பாரிய வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மாத்தறை, திஹாகொட, அத்துரலிய, மாலிம்பட, கம்புறுப்பிட்டிய மற்றும் அக்குரஸ்ஸ பிரதேச செயலகப் பிரிவுகளில் நீர் மட்டம் அதிகரித்து வருவதால் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீர்பிடிப்பு பகுதிகளில் ஏற்கனவே கணிசமான மழை பெய்து வருவதால், பல பகுதிகளில் வெள்ள அபாயம் அதிகம் உள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.