முக்கிய செய்தி
மலேசிய வௌிவிவகார அமைச்சர் இலங்கை வருகை
மலேசிய வௌிவிவகார அமைச்சர் சம்ப்ரி அப்துல் காதிர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை (08) இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.இந்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வௌிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்திக்கவுள்ளார்.எதிர்வரும் 09 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள இந்து சமுத்திர வலய நாடுகளின் பிரதிநிதிகள் மாநாட்டில் சம்ப்ரி அப்துல் காதிர் கலந்துகொள்ளவுள்ளார்.மலேசிய வௌிவிவகார அமைச்சருடன் அந்நாட்டின் உயர்மட்ட இராஜதந்திரிகள் குழுவும் நாட்டிற்கு வருகை தரவுள்ளது.நாளை வருகை தரவுள்ள மலேசிய வௌிவிவகார அமைச்சர் தலைமையிலான இராஜதந்திரிகள் குழாம் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.