முக்கிய செய்தி
கொழும்பில் விரைவில் வெடிகுண்டு தாக்குதலென அச்சுறுத்தல்: உடன் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
கொழும்பில் விரைவில் வெடிகுண்டுத் தாக்குதல்கள் இடம்பெறுமென அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் (06.10.2023) அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கொழும்பில் விரைவில் வெடிகுண்டுத் தாக்குதல்கள் இடம்பெறும் என ஐ.எஸ்.ஐ.எஸ் அச்சுறுத்தல் விடுத்துள்ளமை குறித்து ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்தியை சுட்டிக்காட்டி, அவ்வாறான அழிவுகள் ஏற்படாதவாறு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார்.அத்துடன் பயங்கரவாத தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது தொடர்பாக பொது பாதுகாப்புத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்து, சபையில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்