முக்கிய செய்தி
அரச பொருளாதாரக் கொள்கை இலங்கையர்களை துன்புறுத்துகிறது : சஜித்
தற்போதைய அரச பொருளாதாரக் கொள்கையினால் இலங்கைப் பிரஜைகள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கிடம் தெரிவித்துள்ளார்.இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் அமெரிக்க தூதுவர் பிரேமதாசவை சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.பிரேமதாச மற்றும் அமெரிக்க தூதுவர் ஆகியோர் இலங்கை மக்கள் எதிர்நோக்கும் தற்போதைய பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அரச பொருளாதாரக் கொள்கையினால் இலங்கை பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாகி வருவதாக பிரேமதாச அமெரிக்க தூதுவரிடம் தெரிவித்தார். இலங்கையில் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவது குறித்தும் அவர் அமெரிக்க தூதுவருக்கு தேறிவித்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இந்த சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேராவும் கலந்து கொண்டார்.