Connect with us

முக்கிய செய்தி

பெண்ணை கொடூரமாக கொலை செய்த வர்த்தகர் உட்பட இருவர் கைது

Published

on

 சியாமபலபே பிரதேசத்தில் களனி ஆற்றங்கரையில் பெண்ணொருவரின் தலை துண்டாக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த வர்த்தகரான பிரதான சந்தேகநபர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்கள் சட்டத்தரணிகளுடன் சபுகஸ்கந்த பொலிஸில் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.51 வயதான டி.ஜி பிரதீபா என்ற பெண்ணின் சடலத்தை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். செப்டெம்பர் 27ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த குறித்த பெண் செப்டெம்பர் 28ஆம் திகதி களனி ஆற்றங்கரையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டார்.இறந்தவர் தலை துண்டிக்கப்பட்டு உடல் உறுப்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்டவரின் மகள் செப்டெம்பர் 27 ஆம் திகதி முல்லேரியா பொலிஸில் தனது தாய் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்திருந்தார். குறித்த பெண்ணின் சடலம் மறுநாள் சந்தேக நபரின் வசிப்பிடத்திலிருந்து சுமார் ஒரு மீற்றர் தொலைவில் களனி ஆற்றின் கரையில் மீட்கப்பட்டது.சடலத்தை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் முச்சக்கரவண்டி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் சியாமபலபேயைச் சேர்ந்த 53 வயதுடைய வர்த்தகர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இரண்டாவது சந்தேக நபர், 48 வயதுடையவர், உயிரிழந்த பெண்ணின் உடலை துண்டாடுவதற்கு பிரதான சந்தேக நபருக்கு உதவியதாகக் கூறப்படுகிறது.விசாரணைகளின் போது கிடைத்த சிசிடிவி காட்சிகளில், இறந்தவர் பிரதான சந்தேக நபரை கடுவெல நகரில் உள்ள உணவகம் ஒன்றிற்கு வெளியே சந்தித்ததாகவும், அதன் பின்னர் இருவரும் அவரது காரில் சென்றுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.பிரதான சந்தேக நபர் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் சுமார் 20 வருடங்களாக நெருங்கிய உறவில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பணம் தொடர்பான பிரச்சினையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளதாகவும், சந்தேகநபரின் சியம்பலாபேயில் கைவிடப்பட்ட வீட்டில் இரத்தக் கறைகள், முடிகள் மற்றும் பெண்களின் ஆடைகளின் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.முன்னதாக, சந்தேகநபருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையையும் பொலிஸார் பெற்றிருந்தனர்.