Connect with us

முக்கிய செய்தி

கல்விப் பொது தராதர பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு நற்செய்தி

Published

on

க.பொ.த உயர்தரம் மற்றும் க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் நிறைவடைந்தவுடன் அந்த மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி நெறிகளை உடனடியாக ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பு – கிந்தோட்டை ஸாஹிரா கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே  அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது,  உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான தொழில்சார் பயிற்சி நெறிகள் பின்னர் நாடளாவிய ரீதியில் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கல்விப் பொது தராதர பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு நற்செய்தி | Notification Issued By Ministry Of Education

அத்துடன் சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி நெறிகள் பரீட்சையின் பின்னர் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது உயர்தர மற்றும் சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களில் 50 வீதத்திற்கும் அதிகமானோர் தொழிற்பயிற்சியில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.