உள்நாட்டு செய்தி
“இனி கூட்டு ஒப்பந்தம் இல்லாமல்போகும் – பெருந்தோட்ட சம்மேளனம்

“தொழிற்சங்கங்கள் கோரும் சம்பள உயர்வை வழங்கமுடியாது.எமது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிக்கப்படும். இனி கூட்டு ஒப்பந்தம் இல்லாமல்போகும். பெருந்தோட்டத்துறை சிஸ்டமும் மாறும்.” என்று இலங்கை பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஊடகப்பேச்சாளர் ரொஷான் ராஜதுரை தெரிவித்தார்.
தொழில் அமைச்சில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொழிற்சங்கள் சார்பில் 900 ரூபா அடிப்படை சம்பளமும் 100 வரவுசெலவு திட்ட கொடுப்பனவு வழங்க வேண்டும் என்ற யோசனை இன்று முன்வைக்கப்பட்டது அதற்கு நாம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளோம். 1000 ரூபாவை இலகுவாக வழங்கும யோசனையொன்றை நாம் முன்வைத்துளோம். எமது யோசனையின் பிரகாரம் ஆயிரம் ரூபாவை விடவும் அதிக சம்பளத்தை பெறமுடியும். அனால் அதற்கு தொழிற்சங்கங்கள் விருப்பம் இல்லையென்றார்.