உள்நாட்டு செய்தி
1000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படுவது இவ்வாறுதான்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,000 ரூபா வரை அதிகரிக்கும் யோசனைக்கு சம்பள நிர்ணய சபை மேலதிக வாக்குகளால் அங்கீகாரம் அளித்துள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக 900 ரூபாவையும் வரவு செலவுத்திட்ட சலுகை கொடுப்பனவாக 100 ரூபாவையும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அடிப்படைச் சம்பளம் – 900
வரவுச் செலுத்திட்ட சலுகை கொடுப்பனவு -100
ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி – 150
இதன்படி மொத்தம் – 1150
–இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்–