மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை உடனடியாக 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரி மஸ்கெலியா பிரதேசத்தில் உள்ள பல தேயிலை தோட்டங்களில் தோட்ட தொழிலாளர்கள் இன்று (19)...
பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்க வேண்டும் என்ற சம்பள நிர்ணய சபையின் தீர்மானத்துக்கு எதிராக, முதலாளிமார் சம்மேளனத்தால் தாக்கல்செய்யப்பட்ட மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (09) தள்ளுபடி செய்துள்ளது. மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் உட்பட அனைத்து சங்கங்களும் கூட்டாக கோரிக்கை விடுத்தன. இதனை ஏற்பதற்கு முதலாளிமார் சம்மேளனம் மறுத்துவிட்டது. கூட்டு ஒப்பந்தம் மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாமல்போனாதால், தொழில் அமைச்சு தலையிட்டது. அதன்பின்னர் சம்பள நிர்ணய சபை ஊடாக நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா நிர்ணயிக்கப்பட்டது. இந்த முடிவை முதலாளிமார் சம்மேளனம் ஏற்கவில்லை. சம்பள நிர்ணய சபையின் முடிவுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடினர். இது தொடர்பான மனு இன்று (09.08.2022) விசாரணைக்கு வந்தபோது, மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் மனு தள்ளுப்படி செய்யப்பட்டது என பாரத் அருள்சாமி குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ” மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தொழிலாளர்களுக்கும், காங்கிரசுக்கும் கிடைத்த வெற்றியாகும். அதேபோல தொழிலாளர்களை அடக்கி ஆளலாம் என எவரும் நினைக்ககூடாது. வாழ்க்கை செலவுக்கேற்பவே சம்பள நிர்ணய சபை ஊடாக சம்பளம் நிர்ணயிக்கப்படும். தற்போது வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது. எனவே, தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பது குறித்து நாளைய தினம் (10) விசேட...
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான சம்பளமாக 1,000 ரூபாயை வழங்குமாறு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 1000 ரூபா சம்பளம் வழங்கும் அரசாங்கத்தின் யோசனையை இரத்து செய்யக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மார்ச் 2021 இல் முதலாளிகள் சம்மேளனம் தாக்கல்...
ஹட்டனில் நான்கு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செங்கொடி சங்கத்தினர் ஹட்டன் தொழில் திணைக்களத்திற்கு முன்பாக பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். கூட்டு ஒப்பந்தத்தை மீள கொண்டு வரவேண்டும், தோட்டப்பகுதிகளில் துண்டாக்கப்பட்டு விற்கப்படும் காணி முறைகள் நீக்கப்பட வேண்டும்,...
மலையகத்துக்கான 10 ஆம் வீட்டுத்திட்டம் வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படும். கொரோனா நெருக்கடி நிலைமை இருந்தாலும் மலையகத்துக்கான அபிவிருத்திகள் நிறுத்தப்படமாட்டாது.” என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார். எம்.பி ரமேஷ்வரனின் இன்றைய...
1000 ரூபா சம்பள உயர்வை முறையாக வழங்காத தோட்ட நிர்வாகங்கள் தொடர்பில் ஆணைக்குழு ஒன்றை அமைத்து விசாரணை செய்யுமாறு தொழில் ஆணையாளரை தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கேட்டுள்ளார். நுவரெலியா – லபுக்கலை...
பெருந்தோட்டத் தொழிலாளர்களை அடக்கி ஆள முற்படும் தோட்டக் கம்பனிகளுக்கு பாடம் புகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதற்கான தொழிற்சங்கப் போராட்டத்தை இ.தொ.கா. ஆரம்பித்துவிட்டது. அக்கரபத்தனை பிளான்டேசனுக்குட்பட்ட தோட்டங்களில் வேலைசெய்யும் மக்களுக்கு நியாயம் கிட்டும்வரை பின்வாங்கப்போவதில்லை.” என்று இலங்கைத்...
கூட்டு ஒப்பந்தம் தான் தோட்டத் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு ஆயுதம். இதனை ஏனைய தொழிற்சங்கங்களும் உணர்ந்துள்ளன. எனவே, தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயம் கிட்டும் வரை நாம் ஓயப்போவதில்லை. என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், மத்திய...
1,000 ரூபாய் சம்பளத்தை முழுமையாக அனுபவிக்க முடியாத அவல நிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் இருப்பதாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்த குமார் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று...
ஆயிரம் ரூபா சம்பளம் வேண்டுமென்றால் 26 கிலோ கொழுந்து பறிக்குமாறு தோட்ட நிர்வாகம் கட்டளையிடுகின்றது. அதுமட்டுமல்ல வேலை நேரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்முடியாது. எமது தொழில் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும்.” – என வலியுறுத்தி மஸ்கெலியா, லங்கா...