உள்நாட்டு செய்தி
இ.தொ.கா சார்பில் பிரதமருக்கு நன்றி

சம்பள நிர்ணய சபையில் இன்றைய தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வை வழங்குவதற்கான அனுமதியளிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அரசாங்கத்தின் சார்பில் பங்கேற்ற மூன்று பிரதிநிதிகளும் எமது கோரிக்கைக்கு ஆதரவாக வாக்களித்தமையால் இது சாத்தியமானது என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அரசாங்கம் எடுத்த முயற்சிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இ.தொ.கா குழு இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேரில் சந்தித்து நன்றிகளை தெரிவித்ததாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் கூறுகிறார்.
இதன்பொழுது நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் மற்றும் பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.