முக்கிய செய்தி
பங்களாதேசிடமிருந்து இலங்கைக்கு கிடைக்கவுள்ள நன்கொடை
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் தனிப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் பங்களாதேசிடமிருந்து 54 வகையான அத்தியாவசிய மருந்துகளை நன்கொடையாகப் இலங்கை பெற எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பங்களாதேஷ் பிரதியமைச்சர் ஊடாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பங்களாதேஷ் பிரதமரிடம் நன்கொடை வழங்குவதற்கான கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
மேலும், பங்களாதேசின் சுகாதார அமைச்சின் பங்களிப்புடன் 58,307 அமெரிக்க டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் இந்த வாரத்திற்குள் இலங்கைக்கு வழங்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு எதிர்பார்த்துள்ளது.
அத்தியாவசிய மருந்துகள்புற்றுநோய் மற்றும் சிறுநீரக சிகிச்சைகளுக்கு தேவையான மருந்துகளை பங்களாதேஷ் நன்கொடையாக வழங்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தனது நன்றியைத் தெரிவித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இலங்கைக்கு உடனடி உதவிகளை வழங்கிய பங்களாதேஷ் பிரதமர், சுகாதார அமைச்சர் மற்றும் அரசாங்கத்திற்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நிலவும் மருந்துப் பற்றாக்குறைக்கு தீர்வாக பங்களாதேஷ் அரசுடன் மருத்துவப் பொருட்கள் தொடர்பான நீண்டகால புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளவும் சுகாதார அமைச்சு எதிர்பார்த்துள்ளது.