முக்கிய செய்தி
உயர்தரப் பரீட்சை மாணவர்கள்,மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு..!
இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்கள் குழுவொன்று இன்று (21) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றைச் சமர்ப்பித்துள்ளனர்.
உயர்தரப் பரீட்சையை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் வரை ஒத்திவைத்து கல்வியை முடிப்பதற்கு நியாயமான கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.எவ்வாறாயினும், நவம்பர் 27 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த உயர்தரப் பரீட்சை பிற்போடப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமரத்ன இன்று (21) பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.