முக்கிய செய்தி
மேலும் குறைவடைந்த பணவீக்கம்
நாட்டின் பணவீக்கம் மேலும் குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இது தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
உணவுப் பணவீக்கம்இதன்படி, வருடாந்த அடிப்படையில் தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டால் அளவிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் ஜூலை 2023 இல் 4.6 சதவீதத்திலிருந்து ஆகஸ்ட் மாதத்தில் 2.1 சதவீதமாகக் குறைந்துள்ளது.அதேசமயம், ஆகஸ்ட் மாதத்தில் உணவுப் பணவீக்கம் -5.4% ஆக குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியுடன் அதிகரித்த பணவீக்கம், கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், கடந்த ஜனவரி மாதம் பணவீக்கம் 53.2 சதவீதமாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது