முக்கிய செய்தி
ஜனாதிபதி செயலக ஊழியர்களுக்கு அறிவிப்பு
ஜனாதிபதி செயலகத்தின் பெயர்ப்பலகையை தமது வாகனங்களில் காட்சிப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி செயலகத்தின் அனைத்து அதிகாரிகள் மற்றும் சாரதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான அறிவிப்பை, பதில் ஜனாதிபதி செயலாளர் சாந்தனி விஜயவர்தன வெளியிட்டுள்ளார்.
இவ்வாறான பெயர்ப்பலகைகளை காட்சிப்படுத்தும் எந்தவொரு வாகனமும் ஜனாதிபதி செயலகத்துடன் இணைக்கப்பட்டதல்ல எனவும் அவை பொதுமக்களை ஏமாற்றும் போலியானவை எனவும் பதில் ஜனாதிபதி செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.