முக்கிய செய்தி
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு 10 ரயில் என்ஜின்கள்
இலங்கைக்கு 10 ரயில் என்ஜின்களை வழங்க இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது.ரயில்வே பொது மேலாளர் டபிள்யூ.ஏ.டி.எஸ். குணசிங்க இந்த ரயில் என்ஜின்கள் கடன் உதவியாக இலங்கைக்கு பெறப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த என்ஜின்களை கொண்டு வருவதற்கு முன், ரயில்வே துறை அதிகாரிகள் குழு இந்தியா சென்று தர சோதனை செய்ய உள்ளது.என்ஜின்கள் இல்லாததால் அடிக்கடி ரயில் இயக்கம் தடைபடுவதாக வும் பழைய என்ஜின்கள் பழுது நீக்கப்பட்டு இயக்கப்பட்டாலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இயந்திரக் கோளாறு காரணமாக பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.