Connect with us

முக்கிய செய்தி

துப்பாக்கி பிரயோகத்தில் 6 வயது மகள் பலி, தந்தை காயம்…!

Published

on

மருதானை, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் துப்பாக்கிப் பிரயோகம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான தந்தையும் மகளும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், 6 வயது மகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.