முக்கிய செய்தி
ஓய்வுபெற்ற வைத்தியர்களை அடுத்த வாரம் முதல்,மீள சேவையில் இணைக்க எதிர்பார்ப்பு..!
ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படும் ஓய்வுபெற்ற வைத்தியர்கள் மற்றும் வைத்திய நிபுணர்களுக்கான,ஆட்சேர்ப்பு அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார துறையில் நிலவும் வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக் கொள்ள சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.