முக்கிய செய்தி
இந்திய போர்க்கப்பல் திருகோணமலை வருகை
இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Nireekshak’ போர்க்கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது.நேற்று (14) காலை வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றனர்.
Diving Support Vessel வகையான இந்திய போர்க்கப்பல், 70.5 மீற்றர் நீளமுடையது.கப்பலில் 137 கடற்படை ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.குறித்த கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் கடற்படையின் சுழியோடிகள் பிரிவுடன் பயிற்சி நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.‘INS Nireekshak’ போர்க்கப்பல் எதிர்வரும் 21 ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளது.