முக்கிய செய்தி
சவுதி அரேபியாவின் உதவியுடன் பார்வையற்றோருக்கு உதவிக்கரம்

இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் உள்ள கண்பார்வை பாதிப்பால் அவதியுறும் குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு இலவசமாக மருத்துவ உதவிகளை வழங்க சவுதி அரேபியா முன்வந்துள்ளது.
ஆயிரக்கணக்கான நோயாளிகளைப் பரிசோதித்து, நோய்களைக் கண்டறிதல், அவற்றிற்குப் பொருத்தமான சிகிச்சைகளை வழங்குதல், தேவைப்படும்போது சத்திர சிகிச்சை செய்தல், கண் வெண்படலங்களை (cataract) நீக்குதல், கண்ணீர் குழாயில் ஏற்படும் அடைப்புக்களை நீக்குதல், மூக்குக்கண்ணாடிகள் தேவைப்படும்போது அவற்றை வழங்குதல், தேவையான மருந்துகளை வழங்கல், சிகிச்சை பெற்றுக் கொண்டோருக்கு சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துதல் போன்ற பல அம்சங்கள் இச்சேவையில் உள்ளடங்குகின்றன.
கடந்த செப்டெம்பர் 7 ஆம் திகதி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆரம்பிக்கப்பட்ட இந்த தன்னார்வத் திட்டம் 16 வரை நடைபெறதுகிறது.“வலஸ்முல்ல” பிரதேசத்தில் நடத்தப்பட்ட இலவச கண் சிகிச்சை முகாமில் பலரும் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
காத்தான்குடியில் மற்றொரு முகாம் நடைபெற்று வருகிறது.இலங்கையில் பார்வையின்மையை ஒழிக்கும் நோக்கில், “நிவாரணத்திற்கும் மனிதாபிமான உதவிக்குமான மன்னர் சல்மான் மையத்தின்” ஏற்பாட்டில் “சர்வதேச ‘அல்-பசர்’ அமைப்பின்” ஒத்துழைப்புடன், “சவுதிய தன்னார்வ ஒளி” எனும் பெயரில் இத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.