Connect with us

முக்கிய செய்தி

பொலிஸ் நிலையங்களை மீண்டும் கண்காணிக்கவுள்ள மனித உரிமை ஆணையம்

Published

on

நாடளாவிய ரீதியில் பொலிஸ் நிலையங்களை கண்காணிக்கும் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.க

கடந்த மூன்று வருடங்களாக கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என அதன் ஆணையாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக பொலிஸாருக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த கண்காணிப்பின் போது சந்தேகநபர்களை கைது செய்யும் வழிமுறைகள் மற்றும் கைதிகள் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுகின்றமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.