முக்கிய செய்தி
G77 மாநாட்டில் பங்கேற்கும் ஜனாதிபதி
கியூபாவின் ஹவானா நகரில் இடம்பெறவுள்ள G77 அரச தலைவர்களின் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று(14) பங்கேற்கவுள்ளார்.இந்த மாநாடு இன்று(14) முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
கியூபா மற்றும் அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று(13) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.G77 மாநாட்டைத் தொடர்ந்து, அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 78 ஆவது கூட்டத்தொடரின் அரச தலைவர்கள் மாநாட்டிலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.