முக்கிய செய்தி
வெலிகந்த ரயிலில் மோதி யானை உயிரிழப்பு
நேற்றிரவு மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த மேனகயா இரவு தபால் ரயிலில் \ யானை மோதி உயிரிழந்துள்ளது.வெலிகந்த மற்றும் பூனானி புகையிரத நிலையங்களுக்கு இடையில் இரவு 10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போதைய சம்பவத்திற்கு நெருக்கமான இடத்தில் மூன்று நாட்களுக்கு முன் இரவு 9.15 மணியளவில் புளதிசி ரயிலில் அடிபட்டு மற்றொரு யானை இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.