Connect with us

முக்கிய செய்தி

இலங்கைக்கான கடன் நிதித்தொகை தொடர்பில் மீளாய்வு செய்ய தயாராகும் IMF

Published

on

இலங்கைக்கான விரிவுபடுத்தப்பட்ட நிதி வசதி பற்றிய முதலாவது மீளாய்வு கூட்டம்  சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகும் என ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் அன்றைய தினம் முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரை கொழும்பில் தங்கியிருப்பார்கள்.நாட்டின் பொருளாதார கொள்கை மற்றும் மறுசீரமைப்புக்காக ஆதரவளிக்க சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு கடந்த மார்ச் மாதம் 300 கோடி டொலர் விரிவுபடுத்தப்பட்ட நிதி வசதியின் கீழ் 48 மாதங்களுக்கான நீண்டகால வேலைத்திட்டத்திற்கு அனுமதியளித்தது.

பொருளாதார ஸ்திரத்தன்மைநாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தல், கடன் நிலைமையில் இருந்து மீளுதல், வறியவர்கள் மற்றும் எளிதில் பாதிக்கக்கூடியவர்கள் மீதான பொருளாதார அழுத்தங்களை குறைத்தல், நிதி பிரிவின் ஸ்திரத்தன்மைய பாதுகாத்தல், நிர்வாக துறையை பலப்படுத்தல் என்பன நிதி வசதியளிப்பதன் நோக்கமாகும்.

தற்போது நாடு என்ற வகையில் இருதரப்பு கடன் மாத்திரம் செலுத்தப்படுவதில்லை. எனைய அனைத்து கடன்களும் தவணை அடிப்படையில் அரசாங்கம் செலுத்தி வருகிறது.நிதி கையிருப்புநாட்டில் 360 கோடி டொலர் வெளிநாட்டு நிதி கையிருப்பு காணப்படுவதாக ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

.அவிசாவளை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.