Connect with us

முக்கிய செய்தி

ஜனாதிபதி ரணில் – பசில் சந்திப்பு !

Published

on

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சுமார் ஒரு மணி நேரம் இரு தரப்பினருக்கும் இடையில் நேற்று இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவிற்கு அமைச்சுப் பதவி வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் பசில் ராஜபக்ஷ முன்னதாக கோரிக்கை விடுத்திருந்தார்.இந்த கோரிக்கைக்கு சாதகமாக பதிலளிக்காத காரணத்தினால் ஜனாதிபதிக்கும் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் அண்மையில் கலந்துரையாடல் இடம்பெறவில்லை.

எவ்வாறாயினும், ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில், அடுத்த வரவு செலவுத் திட்டம் மற்றும் அதில் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய சலுகைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த சந்திப்பின் போது எதிர்கால அரசியல் விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.