முக்கிய செய்தி
உயர்தர மாணவர்கள் இருவர் பொலிஸாரால் கைது
அனுராதபுரத்தில் உயர்தர மாணவர்கள் இருவர் கெக்கிராவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அனுராதபுர – கெக்கிராவ பகுதியில் உந்துருளிகளை திருடி மாணவர்கள் அதனை விற்பனை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இரு மாணவர்களும் நீண்டகாலமாக இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சந்தேகநபர்கள் இருவரும் கெக்கிராவ நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டதையடுத்து அடுத்த மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.