Connect with us

முக்கிய செய்தி

யாழில் வாகன விபத்தில் உயிரிழந்த இளம் தாய்

Published

on

யாழில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பப் பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தாயான 28 வயதுடைய வசந்தமலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

புதுக்குடியிருப்பில் இருந்து தேவிபுரத்தில் உள்ள வீட்டிற்கு கடந்த 25ஆம் திகதி உயிரிழந்த பெண், மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது வீதியில் சென்ற முச்சக்கர வண்டியை முந்துவதற்கு முயற்சித்தவேளை, மோட்டார் சைக்கிளின் கைபிடி முச்சக்கர வண்டியில் மோதுண்டு விபத்து இடம்பெற்றள்ளது.

வாகன விபத்தில் உயிரிழந்த இளம் தாய்: யாழில் சம்பவம் | Person Injured In Hospital Death Jaffna

இதன்போது இருவரும் கீழே விழுந்து, பெண் மயக்கமுற்ற நிலையில், புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மாஞ்சோலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக கடந்த 25ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்றையதினம் (28.08.2023) உயிரிழந்துள்ளார்.

இதற்கமைய சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

மேலும், பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *