முக்கிய செய்தி
வரி அறவிடுகிறதா இலங்கை மத்திய வங்கி..!
இணையவழி மோசடிகள் குறித்து நாட்டு மக்களுக்கு இலங்கை மத்திய வங்கி அவசர அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
அதன்படி இலங்கை மத்திய வங்கி (CBSL) மக்களிடம் இருந்து வரிகளை வசூலிப்பதில்லை என்று அந்த அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஏதேனும் தெளிவுபடுத்தல் தேவைப்பட்டால் அது தொடர்பில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியின் மூலம் தொடர்பு கொள்ளுமாறும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.
சில மோசடிக்காரர்கள் மத்திய வங்கிக்கு வரி செலுத்துமாறு பொதுமக்களை நம்பவைத்து பணம் பறிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும் மத்திய வங்கி, மக்களிடம் இருந்து வரிகளை அறவிடுவதில்லை என தெளிவுபடுத்தியுள்ளது.
இவ்வாறான மோசடிகள் காரணமாக பணத்தை இழக்க நேரிடும் என்பதால் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.