முக்கிய செய்தி
கொழும்பில் ஆயுதத்தால் தாக்கி இளைஞர் ஒருவர் கொலை
கிராண்ட்பாஸ்- இரண்டாம் நவகும்புர பகுதியில் ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவரால் நேற்று மாலை அவர் தாக்கப்பட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று(26.08.2023) உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை இரண்டாம் நவகும்புர பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவரே இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த நபருக்கும் அவரது நண்பருக்கும் இடையில் ஏற்ப்பட்ட முரண்பாட்டின் அடிப்படையில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.