Connect with us

முக்கிய செய்தி

பொலிஸ் நிலையத்தில் மர்மமாக உயிரிழந்த பெண் தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Published

on

வெலிக்கடை பொலிஸ் காவலில் வைத்து உயிரிழந்ததாக கூறப்படும் வீட்டுப்பணிப்பெண் ராஜன் ராஜகுமாரியின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (25.08.2023) உத்தரவிட்டுள்ளது.உயிரிழந்த பெண்ணின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனையின் தீர்ப்பை வழங்கும் போதே கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுலுவல இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் யுவதியின் மரணம் தொடர்பான வழக்கின் முடிவுகளை சட்டத்தரணி ஜெயரட்னராஜாவிடம் எமது லங்காசிறி ஊடகம் தொடர்பு கொண்டபோது பல தகவல்களை வழங்கியுள்ளார்.பொலிஸ் உத்தியோகத்தரால் தாக்கப்பட்ட பெண்கொழும்பு – வெலிக்கடை பொலிஸ் காவலில் வைத்து உயிரிழந்ததாக கூறப்படும் ராஜகுமாரி பொலிஸ் உத்தியோகத்தரால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சாட்சியமளிக்கப்பட்டிருந்தது.கொழும்பில் வீடு ஒன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில், குறித்த வீட்டில் பணிப்பெண்ணாக தொழில்புரிந்த பதுளை தெமோதர பகுதியை சேர்ந்த 41 வயதான ராஜகுமாரி என்ற பெண் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென நோய்வாய்ப்பட்டதால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்திருந்தார்.

குறித்த பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணை கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் கடந்த 21ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இவ்வாறு சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.மேலும், குற்றப்புலனாய்வுத் திணைக்கள உத்தியோகத்தர் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் மெரில் ரஞ்சன் லமாஹேவா உள்ளிட்ட அதிகாரிகளின் வழிகாட்டலில் சாட்சியமளித்த மகேந்திரன் சுரேஸ் என்ற நபர், வெலிக்கடை பொலிஸ் நிலையத்திற்குள் இராஜகுமாரி பொலிஸ் உத்தியோகத்தரால் தாக்கப்பட்டதைக் கண்டதாகவும் சாட்சியம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.