முக்கிய செய்தி
வர்த்தக வங்கிகளில் இன்று பதிவாகியுள்ள அமெரிக்க டொலரின் பெறுமதி
இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்றும் (25.08.2023) நிலையாக உள்ளது.மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் முறையே 315.56 ரூபாவாகவும் மற்றும் 330.38 ரூபாவாகவும் உள்ளது.
கொமர்ஷல் வங்கியில் பதிவான நிலைமைகொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 315.70 ரூபாவிலிருந்து 314.73 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளதுடன் விற்பனை வீதம் மாற்றமின்றி 328 ரூபாவாக காணப்படுகிறது. இதேவேளை சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் முறையே 317 ரூபா மற்றும் 328 ரூபாவாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.