முக்கிய செய்தி
பெத்தியாகொடை வீடொன்றில் தீப்பரவல் – இருவர் காயம் !
பேலியகொடை – பெத்தியாகொடை பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீப்பரவல் சம்பவம் தொடர்பில் பேலியகொடை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீடொன்றின் மேல் மாடியிலேயே இந்த தீப்பரவல் சம்பவம் பதிவாகியுள்ளது.இதனால் குறித்த வீட்டிலிருந்து தந்தை மற்றும் மகன் தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வாகன இயந்திரங்களுக்கான எண்ணெய் விற்பனையின்போதே தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.