முக்கிய செய்தி
யாழில் கோர விபத்து : கணவன் உயிரிழப்பு – மனைவி படுகாயம்
யாழ்ப்பாணம், ஏ9 வீதியின் செம்மணி வளைவிற்கு அண்மையில் இன்று பகல் மோட்டார் சைக்கிளும், பொலிஸாரின் தண்ணீர் பௌசரும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கணவன் உயிரிழந்த நிலையில், மனைவி படுகாயமடைந்துள்ளார்.
உயிரிழந்தவர் புவனேஸ்வரன் மனேஜ் (31) என்ற கொக்குவில் கிழக்கை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
மன்னாரை சேர்ந்த 26 வயதான மனைவி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.விபத்து குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.