Connect with us

முக்கிய செய்தி

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் இயந்திரம் செயலிழப்பு…!

Published

on

நுரைச்சோலை நிலக்கரி ஆலையின் ஒரு இயந்திரம் இன்று காலை செயலிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த இயந்திரம் மூலம், தேசிய மின் அமைப்பில் 270 மெகாவோட் சேர்க்கப்பட்டது.இதேவேளை, நுரைச்சோலை நிலக்கரி ஆலையின் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களில் மற்றுமொரு இயந்திரம் பராமரிப்பு பணி காரணமாக கடந்த ஜூன் மாதம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.அதன்படி, தற்போது நுரைச்சோலை நிலக்கரி ஆலையில் ஒரு இயந்தரம் மட்டுமே இயங்கி வருவதுடன், இந்த இயந்திரத்தின் ஊடாக தேசிய மின் அமைப்பிற்கு 300 மெகாவோட் சேர்க்கப்படுகிறது.