முக்கிய செய்தி
நாட்டின் சில பகுதிகளில் குறிப்பிட்ட நேரம் மாத்திரம் குடிநீர் விநியோகம் !
நாட்டின் சில பகுதிகளில் குறிப்பிட்ட நேரத்திற்கு மாத்திரமே குடிநீர் விநியோகிக்கப்படுவதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.வறட்சி காரணமாக போதியளவு நீர் இன்மையினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சபை குறிப்பிட்டுள்ளது.
தங்காலை, நிக்கவரட்டிய, ஹெட்டிபொல, கண்டி, புசல்லாவை நீர் விநியோக மத்திய நிலையங்களிலிருந்து தற்போது நேர அட்டவணையின் படி நீர் விநியோகிக்கப்படுவதாக சபையின் திட்டமிடல் பணிப்பாளர் அனோஜா களுஆரச்சி தெரிவித்துள்ளார்.