Connect with us

முக்கிய செய்தி

5,450 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்…!

Published

on

5,450 பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலில் இணைத்துக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், இந்த ஆசிரியர்கள் மாகாணத்தின் பெயருக்கு ஏற்ப விஞ்ஞானம், தொழில்நுட்பம், ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் ஆகிய முக்கிய பாடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுவதாக தெரிவித்தார்.

எதிர்காலத்தில் மாகாணங்களினூடாக ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும் எனவும் தேசிய பாடசாலைகளுக்கான ஆசிரியர்கள் கல்வி அமைச்சினால் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் எனவும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.