முக்கிய செய்தி
கட்டாருக்கு போதைப்பொருள் கடத்த முயற்சித்த இலங்கையர் கைது…!
சுமார் 10 கிலோ நிறையுடைய போதைப்பொருளை, கட்டாருக்கு கடத்த முயற்சித்த இலங்கையர் ஒருவர்,
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தோஹா நோக்கி புறப்படவிருந்த விமானத்தின் பயணிகள் சோதனையிடப்பட்ட போது, குறித்த நபரிடமிருந்து இந்த போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதன்போது, சந்தேகநபரின் பயணப் பையிலிருந்து 10 கிலோகிராம் 294 கிராம் நிறையுடைய ஹெராயின் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரான இலங்கையர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பாகிஸ்தானின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.