Connect with us

உள்நாட்டு செய்தி

கொழும்புத் துறைமுக மேற்கு முனைய அபிவிருத்தி வேலைத் திட்டத்தை 35 வருடங்களுக்கு இந்தியா மற்றும் ஜப்பான் உடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கை அரசு தொடர்ந்தும் செயற்பட அமைச்சரவை அனுமதி

Published

on

கொழும்புத் துறைமுக மேற்கு முனைய அபிவிருத்தி வேலைத் திட்டத்தை 35 வருடங்களுக்கு இந்தியா மற்றும் ஜப்பான் உடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கை அரசு தொடர்ந்தும் செயற்பட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இதற்கான அனுமதி கிடைக்கப்பபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு தெற்கு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் (ECT) அபிவிருத்தி செய்வதற்கான இலங்கை, இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கிடையே பங்களிப்பு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறித்த உடன்படிக்கையின் ஏற்பாடுகளுக்மைய இந்தியாவின் முதலீட்டாளரால் சமர்ப்பிக்கப்பட்ட முதலீட்டு முன்மொழிவை பகுப்பாய்வுசெய்வதற்காக பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழுவொன்றை நியமிப்பதற்கு 2020 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 26 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த கீழ்க்காணும் யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• கிழக்கு கொள்கலன் முனையம் இலங்கை துறைமுக அதிகாரசபையின் முழுமையான உரித்துடன் கூடிய கொள்கலன் முனையமாக நடவடிக்கைகளை மேற்கொள்ளல்

• கொழும்பு துறைமுகத்தை வலயத்தின் போட்டித்தன்மையான துறைமுகமாக அபிவிருத்தி செய்யும் நோக்கிலும் இலங்கை அரசாங்கத்தால் கைச்சாத்திடப்பட்ட சர்வதேச ஒப்பந்தங்களுக்கு அமைய, இந்திய அரசாங்கம் மற்றும் ஜப்பான் அரசாங்கத்தால் குறித்துரைக்கப்படும் தரப்பினர் மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபையுடன் இணைந்து அரச, தனியார் பங்குடமை வியாபாரமாக அபிவிருத்தி செய்து நடைமுறைப்படுத்தி 35 வருடங்களின் பின்னர் மீண்டும் ஒப்படைத்தல் அடிப்படையில் மேற்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.