முக்கிய செய்தி
நாளை கிளிநொச்சியில் கறுப்பு ஜுலை நினைவேந்தல் நிகழ்வு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி), கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் கறுப்பு ஜுலை தமிழின அழிப்பின் 40வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வானது நாளைய தினம் (2023.07.27) பி.ப.4.00 மணிக்கு, கிளிநொச்சி சேவைச்சந்தை முன்றலில் நடைபெறவுள்ளது.
இந் நினைவேந்தல் நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராசா, கட்சியின் பொதுச்செயலாளர் மருத்துவர்.ப.சத்தியலிங்கம், தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தலைவர் நல்லதம்பி சிறீகாந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன் மற்றும் ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.அனந்தி சசிதரன், நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர்களான பாக்கியசெல்வம் அரியநேந்திரன், கனகலிங்கம் சிவாஜிலிங்கம், ஈஸ்வரபாதம் சரவணபவன் உள்ளிட்ட அரசியற் பிரமுகர்களும் கலந்துகொள்ளவுள்ளதோடு நினைவுரைகளையும் ஆற்ற உள்ளனர் .
மனிதப் பேரவலத்துக்கும், தமிழின அழிப்புக்கும் தோற்றுவாயான கறுப்புஜீலைப் படுகொடுலையில் உயிர் துறந்த உறவுகளை அஞ்சலிக்கும் இந் நினைவேந்தல் நிகழ்வில் அனைத்துப் பொதுமக்களையும் இணைந்துகொள்ளுமாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார்.