முக்கிய செய்தி
சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணிகள் மீண்டும் ஆரம்பம்
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வெரஹெர சாரதி அனுமதிப்பத்திரம் அச்சடிக்கும் பிரிவின் பணிகள் தாம் பொறுப்பேற்கவுள்ளதாக,மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி முதல் பொறுப்பேற்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் தற்போது திணைக்களத்தின் பணிகள் குறித்து பயிற்சி பெற்று வருவதாக நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
ஒப்பந்தத்தின் பிரகாரம் சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் திணைக்களம் பல வருடங்களாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்ததாகவும்,அந்த ஒப்பந்தம் மீண்டும் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.