Connect with us

முக்கிய செய்தி

சிறுவர் இல்லத்திலிருந்து மூன்று சிறுமிகள் மாயம்

Published

on

   கம்பஹா பகுதியில் உள்ள சிறுவர் இல்லத்திலிருந்து மூன்று சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக கம்பஹா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 15 வயதுடைய சிறுமி ஒருவரும் 16 வயதுடைய இரண்டு சிறுமிகளும் இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

குறித்த சிறுவர் இல்லத்தின் உரிமையாளரினால், காணாமல் போன சிறுவர்கள் தொடர்பில், நேற்று பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. இந்த முறைப்பாட்டிற்கு அமைய காணாமல் போன குறித்த சிறுமிகளை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.